ஒடிசாவில் ரயில்கள் மோதி விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு.!

ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிய விபத்து நடந்த இடத்திற்கு நேரில் பார்வையிட பிரதமர் மோடி வந்துள்ளார்.
ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. ஒடிசாவின் பஹானாகா ரயில் நிலையம் அருகே நேற்று கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு நேரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி தற்போது வந்தடைந்தார். ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்தும் பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்வதற்காக வந்தடைந்தார். மேலும் கட்டாக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களிடம் நேரில் நலம் விசாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
#WATCH | Odisha: Visuals from the site of #BalasoreTrainAccident where PM Modi has reached to take stock of the tragic accident that has left 261 people dead and over 900 people injured so far.#OdishaTrainAccident pic.twitter.com/fkcASxgZu1
— ANI (@ANI) June 3, 2023