இத்தாலியில் கொளுத்தும் வெயில்! வெப்ப அலை தாங்காமல் அலறும் மக்கள்!

heat in Italy

இத்தாலியின் தலைநகரான ரோம் நகரில் கொளுத்தி வரும் வெயில் காரணமாக நீரிழப்பு காரணமாக ஒரு நிமிடத்திற்கு 6 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்னர். வெப்ப அலை தாங்கா முடியாமல், மக்கள் குடிநீருக்காக வரிசையாக நின்று வாங்கி அருந்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரிக்கிறது. இத்தாலியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவான நிலையில் மக்களுக்கு, குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

வெப்பம் காரணமாக சில பயணிகள் சீக்கிரமாக வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளில் வெப்ப அலைகள் மோசமடைந்துள்ளன, இது வெப்பம் தொடர்பான உயிரிழப்பின் அபாயத்தை உயர்த்துகிறது என்று உலக வானிலை மையம்  எச்சரித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்