கருங்கடலில் பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி உக்ரைன் மீது பழி சுமத்தலாம்..! அமெரிக்கா

கருங்கடலில் உள்ள பயணிகள் கப்பல்களை ரஷ்யா தாக்கி, பின்னர் உக்ரைன் படைகள் மீது பழி சுமத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
உக்ரைன் துறைமுகங்களில் ரஷ்யா கூடுதல் கடல் கண்ணிவெடிகளை அமைத்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகளிடம் தகவல் உள்ளது என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆடம் ஹாட்ஜ் தெரிவித்துள்ளார்.
கருங்கடல் வழியாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.