மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.! வீடியோவை நீக்கக் கோரி ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை..!

மணிப்பூர் பெண்கள் தொடர்பான வீடியோவை நீக்கக் கோரி ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
இதற்கு பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை உடனே நீக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, வீடியோவை நீக்க வேண்டும் எனவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக மணிப்பூர் டிஜிபியிடம் இந்திய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விசரணை விவரங்களை கேட்டறிந்துள்ள்ளார்.
மேலும், காவல்துறை விசாரணை நடத்தியது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.