பிரிஜ் பூஷனுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம்.!

இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சிங்கிற்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சிங்கிற்கும், கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் வினோத் தோமர் சிங் ஆகியோருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.