ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு இடையே உக்ரைன் தாக்குதலில் ரஷ்ய நடிகை ஒருவர் உயிரிழந்தார். ரஷ்ய நடிகை போலினா மென்ஷிக் கிழக்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்காக நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது உக்ரைன் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ‘மேடையில் மென்ஷிக் ரஷ்ய வீரர்களுக்காக கிட்டார் வாசிப்பதையும், பாடுவதையும் காணலாம். அப்போது திடீரென உக்ரைன் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. உடனே அந்த கட்டிடம் அதிர்வு ஏற்பட்டு வீடியோ நின்று விடுகிறது. இந்த தாக்குதலில் ரஷ்ய நடிகை போலினா மென்ஷிக் உயிரிழந்தார்.
மேலும் சுமார் 100 பேர் காயமடைந்தனர். எனினும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் உக்ரைனில் நடந்த விருது வழங்கும் விழாவில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஒப்புக்கொண்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…