G20 Summit : உக்ரைன் உடனான போர்.. ரஷ்யாவின் நிலைப்பாட்டை ஜி20 மூலம் தெரிந்து கொள்ளலாம். – ஐரோப்பிய கவுன்சில் தலைவர்.!

Ukraine President Zelensky - European Council Charles Michel

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் ஆரம்பித்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகள் ரஷ்யாவுடனான பொருளாதர தொடர்பை துண்டித்துக்கொண்டன. அதே போல ரஷிய அதிபர் புதினும் பெரும்பாலும் எந்த நாட்டிற்கும் வெளியுறவு விவகாரம் தொடர்பாக செல்வதில்லை.

தற்போது இந்தியா, டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் உறுப்பு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக இன்று காலை முதலே உலக நாட்டு தலைவர்கள் டெல்லிக்கு விமானம் மூலம் வந்துகொண்டு இருக்கின்றனர் . இவர்களுக்கு அரசு முறை மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதில் ரஷ்யா சார்பாகவும், சீனா சார்பாகவும் அந்நாட்டு அதிபர்கள் கலந்துகொள்ளவில்லை. ரஷ்ய அதிபர் புதினுக்கு பதில் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ் கலந்துகொள்ள உள்ளார். அதே போல சீன அதிபருக்கு பதில் சீன பிரதமர் லி கியாங் கலந்துகொள்ள உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ஜி20 மாநாட்டில் ஐரோப்பா கவுன்சில் சார்பாக கலந்துகொண்ட அதன் தலைவர் சார்லஸ் மைக்கேல் டெல்லி வந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த G20 கூட்டத்தில் உக்ரைன் நாட்டின் மீதான போர் விவகாரம் குறித்து ரஷ்யாவின் நிலைப்பாடு பற்றிய ஓர் தெளிவை ஏற்படுத்த எங்களுக்கு இது ஓர் நல்ல சந்தர்ப்பம் என்று குறிப்பிட்டார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை தொடுத்து, கருங்கடலை போர்க்களமாக மாற்றி வருகிறது என்றும். வளரும் நாடுகளுக்கு எதிரானசெயல்பாட்டில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்