விண்ணிலிருந்து புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ்.! பிரிந்து சென்றது க்ரூ டிராகன் விண்கலம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்ணில் இருந்து க்ரூ டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு புறப்பட்டனர்.

Sunita williams Crew dragon

கலிபோர்னியா : சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்த நிலையில், அவர்கள் இன்று (மார்ச் 18) பூமிக்கு திரும்புகிறார்கள்.  இதற்கான பயணம் தற்போது வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. முன்னதாக நாசா அறிவித்துள்ளபடி, இன்று மார்ச் 18, SpaceX Crew Dragon விண்கலத்தின் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தற்போது புறப்பட்டுள்ளனர்.

பல்வேறு தடைகளை தாண்டி டிராகன் விண்கலம் பூமி திரும்புவதற்கு வானிலை சரியானதாக உள்ளதாக கணிக்கப்பட்டதை அடுத்து இந்த பயணம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான அனைத்து சோதனைகளும் முன்கூட்டியே வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பிறகு க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸும் வில்மோர் மற்றும் குழுவினர் நுழைந்தனர். ஏற்கனவே அதில் பயணித்த நான்கு க்ரூ டிராகன் குழுவினரும் சுனிதா வில்லியம்ஸ் குழுவினருக்கு பதிலாக தங்கள் பணிகளை சர்வதேச விண்வெளி மையத்தில்தொடர்வார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் மற்றும் அவர்கள் குழுவினர்களான நிக் ஹாக் மற்றும் ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் க்ரூ டிராகன் விண்கலத்தில் உள்ளனர்.

அந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றையும் நேரலையில் ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது. அதன்டி, பூமிக்கு  புறப்படுவதை நாசா ஏற்கனவே நேரடி ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டது.  அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET), மார்ச் 18, 2025 (இன்று) அதிகாலை 1.05 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி (IST), மார்ச் 18, 2025 (இன்று) காலை 10.35 மணிக்கு பூமியை நோக்கி புறப்படும் என முன்கூட்ட்டியே நேரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, டிராகன் விண்கலமானது சரவதேச விண்வெளி மையத்தில் இருந்து தற்போது பிரிந்துள்ளது (Undocking). பிரிந்து சென்ற டிராகன் தற்போது அதன் வட்டப்பாதையில் பயணித்து வருகிறது.

அமெரிக்க கிழக்கு நேரப்படி (ET): மார்ச் 18, 2025, மாலை 5.57 மணி (PM), இந்திய நேரப்படி (IST), மார்ச் 19, 2025, அதிகாலை 3.27 மணிக்கு பூமியில் டிராகன் விண்கலம் தரையிறங்க தொடங்கும். இது புளோரிடா கடற்கரையில் விண்கலம் பாரசூட்டுகள் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கும் தோராயமான நேரமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings