இடஒதுக்கீடு சட்டம் ரத்து.! வங்கதேச உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

வங்கதேசம் : 1971ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக போராடிய போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு தரும் சட்டத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் காரணமாகவே கடந்த சில நாட்களாக வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் , பொதுச்சொத்துக்கள் சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேறின . பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதன் காரணமாக உச்சநீதிமன்றம் கடந்த வாரம், தற்போதைக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.
இருந்தும், வாங்காதேச அரசு இடஒதுக்கீடு சட்டத்தை முழுதாக திரும்ப பெரும் வரையில் போராட்டம் தொடரும் என மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதன் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களும் அவரவர் சொந்த ஊர் திரும்பினர்.
இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கானது அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஒபைதுல் ஹசன் தலைமையில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் முக்கிய உத்தரவு வெளியாகியுள்ளது.
அதன்படி, விடுதலை போராட்ட வீரர்களின் சந்ததியினருக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தமானது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கிடு சட்டத்தில் திருத்தங்களை வேண்டுமானால் அந்நாட்டு அரசு கொண்டு வரலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது மாணவர்களின் போராட்டம் சற்று தணியுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025