Ind-Nepal PM [Image-PTI]
உத்தரப்பிரதேசத்தின் முதல் தரை துறைமுகத்தை பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசந்தா ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.
நேபாளத்தின் பிரதமராக பிரசந்தா கடந்த டிசம்பரில் பதவியேற்ற பின்பு முதல்முறையாக இந்தியாவிற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார். இது அவருக்கு பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணமும்கூட. பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் ‘பிரசந்தா’வும் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இரு தரப்புகளிலும் எரிசக்தி, வர்த்தகம், இணைப்பு மற்றும் பல துறைகளில் இந்தியா-நேபாள ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் இன்று பேசுவார்கள். அவர்களின் சந்திப்பில் மின்சாரத் துறையில் இரு தரப்பு நாடுகளிலும் சேர்த்து ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் ஆழமாக்குவதும் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-நேபாளம் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முடித்துக்கொண்டு இரு பிரதமர்களும் இந்தியா-நேபாள எல்லையில் பஹ்ரைச்சில் உள்ள உத்தரபிரதேசத்தின் முதல் தரை துறைமுகத்தை(லேண்ட் போர்ட்) திறந்து வைக்க உள்ளனர். 115 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்த ருபைதிஹா லேண்ட் போர்ட் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…