Amitshah allparty [Image-Twitter/@Amitshah]
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரை வந்தடைந்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ‘என் மண், என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று தொடங்குகிறார். தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார்.
இந்த 6 மாத கால நடைபயணத்தின் போது பாஜக தேசியத் தலைவர்கள் பலரும், அண்ணாமலையுடன் கலந்து கொள்ள உள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், அண்ணாமலையின் என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்த உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். அமைச்சர் அமித்ஷா வருகையை முனிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காபூல் : ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் நடைபெற்ற ஷ்பகீஸா கிரிக்கெட் லீக் (Shpageeza Cricket League) டி20 போட்டியில் ஒரு…
சென்னை : 2025 ஜூலை 22 அன்று, சாத்தான்குளம் கொலை வழக்கில் ஒரு முக்கியமான திருப்பமாக, முதல் குற்றவாளியான முன்னாள்…
சென்னை : தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் சூர்யா நாளை தன்னுடைய 50-வது பிறந்த…
சென்னை : கடந்த ஜூலை 12ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுகளை மாநிலம் முழுவதும்…
டெல்லி : இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…