போக்குவரத்து துறை ஊழியர்களுடன் இன்று ஆலோசனை..!

போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் வைத்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025