DMK : நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.! திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்ட தேதி அறிவிப்பு.!

வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி (அடுத்த வார சனிக்கிழமை) திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
திமுக மக்களவை எம்பிக்கள் 20 பேர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேர் என 30 பெரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அறிவுத்தப்பட்டுள்ளது . இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் திமுகவின் நிலைப்பாட்டை எவ்வாறு எடுத்துரைப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சட்ட ரீதியில் எவ்வாறு எடுத்துரைப்பது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பாஜக தீர்மானம் கொண்டு வந்தால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன .
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025