கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில் தான் – பிரதமர் மோடி

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்தும், எதிர்க்கட்சிகள் குறித்தும், இந்தியா கூட்டணி குறித்தும் பிரதமர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் கட்சத்தீவை மீட்க வேண்டும் என்று கடிதம் எழுதியிருக்கிறார்; நமது நாட்டுக்கு சொந்தமான கச்சத்தீவை வேறு நாட்டிடம் ஒப்படைத்தவர்கள் யார்? இந்திரா காந்தி ஆட்சியில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1962ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, அசாம் மக்களுக்கு துரோகம் செய்தார்.
தேச விரோத விஷம கருத்துக்களை சொல்லும் தமிழகத்திலிருந்து தான் தேச பக்தியை தன் மூச்சாக கொண்ட ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் போன்ற தேச பக்தர்கள் தேசியத்தின் வழி மக்களை வழிநடத்தினர் என பிரதமர் புகழ்ந்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களை நேரு புறக்கணித்ததால் அதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். எதிர்க்கட்சிகள் செய்வது எல்லாமே அரசியல் தான் அவர்கள் மனதில் வேறு ஒன்றும் இல்லை.
இதுவரை வடகிழக்கு மாநிலங்களுக்கு 50 முறை பயணம் செய்துள்ளேன். வடகிழக்கு மாநிலங்கள் ஏற்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம். மணிப்பூரில் தற்போதைய சூழலுக்கு காங்கிரஸின் அரசியலே காரணம். அரசியலைக் கடந்து காங்கிரசால் எதையும் சிந்திக்க முடியாது.
வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைந்த எதிர்காலம் என்பதே எனது கனவு. அருணாச்சல பிரதேசத்தில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. புதிய உலகத்தின் மையப்பகுதியாக வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025