நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..! மக்களவை ஒத்திவைப்பு…!

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாலை 5:05-க்கு உரையை தொடங்கிய நிலையில், 7.20-க்கு தனது உரையை நிறைவு செய்தார்.
சுமார் இரண்டைகால் மணிநேரம் உரையாற்றிய நிலையில், பாஜக அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பில் போதிய ஆதரவு இல்லாததால் தீர்மானம் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க யாரும் இருக்கவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், மக்களவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025