மணிப்பூர் விவகாரம் – வரும் 24-ஆம் தேதி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்…!

வரும் 24-ஆம் தேதி மணிப்பூர் மாநில முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் தொடர் வன்முறை நடந்து வரும் நிலையில், பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ நேற்று முன்தினம் சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மணிப்பூர் மாநில முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. திமுக சார்பில் சென்னையில் வரும் 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள நிலையில், விசிக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.