புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது.இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதது வருத்தமளிக்கிறது, ஆனாலும் மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம் . நீட், நெக்ஸ்ட் தேர்வுகளில் இருந்து விலக்கு, இரு மொழிக்கொள்கையை கடைபிடிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானங்கள் புதுச்சேரி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது . புதுச்சேரி மாநில உள்ளாட்சி தேர்தல் நடத்தும் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமனம் என்று பேரவையில் […]
கர்நாடக சட்டமன்ற விவகாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடக்கும் என இந்திய அரசியல் களமே எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சனிக்கிழமை அதிருப்தி சுயேச்சை எம்எல்ஏக்கள் இருவர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி, அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பாக பதில் கூறிய நீதிபதி, ‘ […]
டெல்லியில் வைகோ தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது போல தமிழகத்தில் திமுக கூட்டணி அபார வெற்றிபெற்றது.அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால் மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் […]
கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை தன்னை வந்து சந்திக்க வேண்டும்’என ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார். இதற்க்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் […]
அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அதே போல சந்திர பாபு நாயுடு மகனுக்கு மாவோயிஸ்ட் மிரட்டல், செம்மரகடத்தல் கும்பல்களின் மிரட்டல் இருந்ததால் கொடுக்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. […]
சமீபத்தில் ஒரு தங்களது அறக்கட்டளை மூலம் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை பற்றி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது .சூர்யாவின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசரும் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு அளித்துள்ளார்.அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய கல்விக் கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன்,வரவேற்கிறேன்.கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசுப் […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும்.ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம். ஆசை வார்த்தைகளாலும் அடுக்கடுக்கான பொய்களாலும் ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தாலும் மக்களின் மனங்களில் திமுகவே நிரந்தரமாக ஆட்சி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் உறுதியாக நடக்கும் நம்பிக்கை வையுங்கள் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையத்தை தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் விரைவில் உறுதியாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் “தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை அதானே வாழ்கை” […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினி, சூர்யா, திருமாவளவன் ஆகியோர் புதிய கல்வி கொள்கையை எதிர்க்கிறார்கள். கால அவகாசம் இருப்பதால் வரைவில் எது பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கலாம். அரசியல் செய்வதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், கெயில், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். நீட் தேர்வை மாணவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் நீட்தேர்வை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் பூட்டான் செல்ல இருக்கிறார். மக்களவையில் நடைபெறும் கூட்டத்தொடர் முடிந்ததும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூட்டான் நாட்டிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாள் பூட்டான் செல்லும் பிரதமர் அங்கு இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற போது பூட்டான் பிரதமர் […]
காஞ்சிபுரம் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அத்திவரதரை சுவாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு கூடுதலாக அனைத்து வசதிகளையும் தடையின்றி சிறப்பாக ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டது. அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் புதைக்க கூடாது என்ற ஜீயரின் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில், முன்பு காலங்களில் ஆகம விதிப்படி எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ, அந்த வழிமுறையே தற்போதும் பின்பற்ற முடியும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆடு நனைக்கிறதே என்று ஓனாய் அழுதது போல் இருக்கிறது ஸ்டாலின் அதிமுக வினரை திமுகவில் இணைய அழைப்பு விடுத்தது. திமுகவில் கருணாநிதி மறைவிற்கு பிறகு அதிருப்தி இருக்கிறது. சாப்பிட்டு போட்ட இலைகள் தங்கள் சுய நலத்திற்க்காக திமுக வில் இணைந்துள்ளனர். அதிமுக ஒரு தேன் கூடு உண்மையான அதிமுக தொண்டன் யாரும் திமுக விற்கு செல்ல மாட்டார்கள். கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக நிறுத்தர்குறி வைக்கப்பட்டுவிட்டது.ஆட்சியை கலைக்க […]
23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார் வைகோ. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியின் பொது திமுக உறுதியளித்ததை போல ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் மதிமுகவிற்கு வழங்கப்பட்டது. மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் போட்டியின்று தேர்வு செய்யபட்ட்டார். ஜூலை 25 ம் தேதி மாநிலங்களைவையில் உறுப்பினர்கள் பதவி ஏற்க இருக்கும் நிலையில் வைகோ அவர்கள் இன்று நாடாளுமன்றம் சென்றார். உள்ளே சென்ற பின், அரசியல் மூத்த தலைவர்களான அறிஞர் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய வழிகாட்டல் மதிப்பு எவ்வளவு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதா அவர்களின் சொத்துக்களை நிர்வாகிக்க தனி ஒரு நிர்வாகியை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வாக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி தீபா,தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும் சொத்துக்களின் வரிப்பாக்கியை கட்ட நாங்கள் தயார் என்றும் கூறி […]
சந்திராயன் – 2 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தி இருப்பதற்க்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தமிழக எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள முதல்வர், சந்திராயன் விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியாவுக்கே பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்துள்ளார். நிலவில், விண்கலத்தை தரை இறங்கி ஆய்வு செய்த ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் ஒன்றாக மாற்றியிருப்பதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். இந்த சாதனை, […]
சந்திராயன் – 2 விண்கலம் விண்ணில் ஏற்றப்பட்டது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி “ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் தருணம்” என்று கூறி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்… இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பாதிவிட்டுள்ளார். அதில்,நிலவின் தென்துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய உள்ள சந்திராயன் – 2 தனித்தன்மை வாய்ந்தது என்று கூறியுள்ளார். மேலும், தற்போது அறிவியல் மற்றும் அறிவியல் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்களுகளை […]
கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடத்தப்படும் என செய்திகள் வெளியாகின. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்து அவசர வழக்காக விசாரிக்க கோரினர். ஆனால் நீதிமன்றம் அதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என நிராகரித்தது. தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமி கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், ‘ நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டசபையில் நடத்த இரண்டு நாட்கள் அவகாசம் வேண்டும்.’ என கோரிக்கை வைத்துள்ளார்.
சேலத்தில் வங்கிக்கடன் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாண்டியன், பல்லவன் கிராம வங்கி இணைந்து தமிழக கிராம வங்கியாக செயல்படுகிறது. விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், ஏழைகளுக்கு மட்டுமே கடனுதவி.கடன் வாங்கியவர்களில் 99% பேர் திருப்பி அளித்து சாதனை படைத்துள்ளனர் . எவ்வித உத்தரவாதமும் இன்றி ரூ.20 லட்சம் வரை சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்படும். கந்து வட்டி கொடுமையில் இருந்து ஏழை, எளிய மக்களை தமிழக கிராம வங்கி விடுவிக்கிறது என்று […]
கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் களமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில்’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை […]
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில், அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் சபாநாயகர் நடத்தவில்லை. கர்நாடகா சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என […]