அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ட்வீட். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர், பக்கத்தில், […]
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, முடிந்த நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கரூர் மற்றும் நாமக்கல் செல்கிறார்.
தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொழில் புரிய எளிதான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில் தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் 14 இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது. பட்டியலில் டாப் சாதனையாளர்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், தெலுங்கானா மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘நமது மாண்புமிகு துணைத் ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் […]
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து, க கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது குறித்து அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி வளாகத்திற்குள் நூறு விழுக்காடு கொரோனா தடுப்பு […]
மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். இன்று தேசிய மருத்துவர் தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர் தினம். பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்!’ என பதிவிட்டுள்ளார். ஏழை […]
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-ஆம் ஆண்டு, வருமானவரித்துறையினர் சசிகலாவிற்கு சொந்தமான 180 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில், அவர்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும், கணக்கில் வராமல் பலகோடி சொத்துக்கள் சேர்த்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 5 வருடமாக பினாமி சொத்துக்கள் தொடர்பாக ஆவணங்களை […]
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் வைத்து மதுரையில் கூட்டம் நடைபெறும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் அவருடைய அழைப்பை […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக ஆதரவு கோரினார் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா. நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு,டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக […]
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல். உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எடுத்துள்ள முடிவு. ஏழை எளிய. நடுத்தர மக்கள் மீது பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. விதி விலக்குகளை நீக்குதல் (Removal of exemptions) என்ற பெயரில் அன்றாடம் […]
உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம். கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல். சேலம் மாவட்டம் மேட்டூரில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மநீம கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் […]
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை பாஜக முதலமைச்சராக முன்னிறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில ஆளுநர் […]
பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் இன்று மாலை மகராஷ்டிரா முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் அறிவித்தனர். இதனால்,மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]
அதிமுகவில், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியதே பாஜக தான் என நயினார் நாகேந்திரன் பேட்டி. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் எனக் கூறப்படுகிறது. […]
அதிமுகவை செயல்படாத நிலைக்குக் கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என ஈபிஎஸ் கடிதம். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தற்செயல் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் […]
தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஏற்கனவே, ங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 3 வயது குழந்தைகளை எல்.கே.ஜி-யிலும், 4 மற்றும் அதற்க்கு மேல் உள்ள குழந்தைகளை யுகேஜி-யிலும் சேர்க்குமாறு […]
திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால், குடியரசுத் தலைவர் தேர்தல் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல், […]
எனக்கு எதற்காக விளம்பரம், இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா? 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக்கூடியவன் நான். இதற்கு மேல் எதற்கு எனக்கு விளம்பரம்? என முதல்வர் கேள்வி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய அவர், அமைச்சர் காந்தி அவர்களை புகழ்ந்து பேசினார். […]
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் மூலம், தகுதியற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது எனஉயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அறிவுறுத்தல். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா, தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் […]