இந்த ஆண்டு 50 சதவீத ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ […]
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்நாடு […]
பெண்களுக்கு எதிராக பேசிய திருமாவளவனை தமிழக அரசு ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை […]
நலம் விசாரித்த சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கொரோனா காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் இன்று கே.பாலகிருஷ்ணன் குணமடைந்துள்ளார். இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனா தொற்று ஏற்பட்டு […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை .சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. எனவே போட்டியிட மாட்டேன்.என்னுடைய சகோதர,சகோதரிகளை போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும் […]
மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை இந்த வருடமே வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50 % இட ஒதுக்கீடு அல்லது […]
தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த பயமும் இல்லை என்று விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து […]
அமைச்சர் துரைக்கண்ணு முழு நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியாற்ற வர வேண்டும் என விரும்புகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இதனிடையே அமைச்சர் துரைக்கண்ணுக்கு மூச்சுத்திணறல் அதிகரித்துள்ள நிலையில், எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவால் […]
பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.எனவே 243 தொகுதிகளை அடங்கிய பீகாரில் ,பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது.முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 2வது கட்டமாக 94 தொகுதிகளுக்கு நவம்பர் 3 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3வது கட்டமாக […]
ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதி மொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி தெரிவித்துள்ளார். ஆதார் அட்டைகளை வழங்கும் UIDAI நிறுவனம், தற்பொழுது புதிய வகையிலான ஆதார் அட்டைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது, PVC அட்டை மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கிரேடிட் கார்டுகள் போல எளிதாக எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம் எனவும், இதனை பெற UIDAI அமைப்பின் அங்கீகாரப் பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று, ரூ.50-ஐ கட்டணமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது புதிதாக […]
பிரதமர் மோடி மனதின் குரல் என்னும் 70வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பண்டிகை காலம் மற்றும் உள்ளூர் உற்பத்தி பொருட்களை வாங்குவது, கொரோனாத் தொற்று போன்றவைகள் குறித்து பிரதமர் மோடி பேசினர். மேலும் மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் நடத்தி வருகின்ற பொன் மாரியப்பனுடன் நேடியாக பிரதமர் மோடி உரையாடினார். அந்த உரையாடலில் வணக்கம் நல்லா இருக்கீங்களா? என பேசிய […]
OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக […]
லண்டன் தேம்ஸ் நதியைப் போல் மதுரை வைகை நதி விரைவில் மாற உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் அதிமுக மேற்கு இளைஞர் மற்றும் பெண்கள் பாசறையின் உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு 2021 தேர்தலில் திமுக ஆட்சி பிடிக்குமா? பிடிக்காதா? என்று ஸ்டாலின் ஏங்கிக் கொண்டிருக்கிறார். யூடியூப், ஃபேஸ் புக்,டுவிட்டர் மூலம் ஏதாவது ஒரு செய்தியை பரப்பி அரசுக்கும் அதிமுக கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் […]
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், […]
பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பூரணசுந்தரி என்பவர் மதுரை மணிநகரத்தைச் சேர்ந்தவர்.25 வயதான இவர் 2019-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, அகில இந்திய அளவில் 286-வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற இவருக்கு இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) பணியிடம் ஒதுக்கப்பட்டதுஇதற்கிடையில் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் சென்னைக் […]
பாஜகவில் வனிதா விஜயகுமார் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவினர் பிரபலங்கள் பலரை தங்களது கட்சியில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்ராதாரவி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக கட்சியில் மாநில அளவில் பொறுப்பில் உள்ளனர். சமீபத்தில், கூட காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி குஷ்பு பாஜகவில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நடிகை வனிதா விஜயகுமார் அவர்களை பாஜகவில் சேர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அவர் பாஜக கட்சியில் […]
உத்தரப்பிரதேச அரசைப் போல் அல்லாமல் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை என்று மறுக்கவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கு சென்று அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.முதலில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி செல்ல அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் தான் ராகுல் ,பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரப் […]
சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களை காலம் காலமாக இழிவுபடுத்தி, பெண்கள் படிக்கக்கூடாது, வேலைபார்க்கக்கூடாது, ஆண்களை விட பெண்கள் எல்லாவற்றிலும் குறைவானவர்கள், அவர்களுக்கு எல்லாவிதமான தகுதியும் கிடையாது என்று மனுதர்மம் நூல் தெரிவிப்பதாக கூறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் “மனுதர்மம்” சனாதன நூலைத் தடைசெய்ய மத்திய, மாநில அரசுகளை வலிறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. […]
பிரதமர் நாட்டு மக்களுக்கு மகாநவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாக தென் மாநிலங்களிலும், தசராவாகவும், மகாநவமியாகவும் வெகு சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மகாநவாமி முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நவராத்திரியின் இந்த புனித நாளில்,அன்னை துர்காவின் ஒன்பதாவது சக்தியை சித்திதத்ரி தேவி வணங்குகிறார்.அன்னை சித்திதாத்ரியின் ஆசீர்வாதத்துடன்,ஒவ்வொருவரும் தங்கள் படைப்புகளில் […]
குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாகவும்,தசராவாகவும்,மகாநவமியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டு மக்களுக்கு தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவர் தசரா வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த திருவிழா சத்தியத்தின் வெற்றியையும், அநீதியின் மீதான பொய்யையும் குறிக்கிறது. தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து […]