ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார். இதனால் ஐ.என்.எக்ஸ். […]
மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில்,ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலையை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களில் […]
வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து ஓன்று பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.அதாவது தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும்,நடிகருமான கமல்ஹாசன் கூறுகையில்,தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன். ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு […]
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை முதலில் சிபிஐ கைது செய்து விசாரித்தது.இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.இதனிடையே சிதம்பரம் தரப்பில் சிபிஐக்கு எதிரான வழக்கில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.அந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார். […]
ரபேல் வழக்கில் எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.அப்பொழுது சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இது குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில்,ரபேல் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பொய் பிரசாரம் செய்த எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி. […]
மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்தநிலையில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி திமுக இளைஞரணி அமைப்பாளர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.நகர் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்பமனு தாக்கல் செய்தார்.
ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS — KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019 தமிழக பாஜக இணையதள தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் வாயிலாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதாவது திருக்குறளை ஆவின் பால் […]
திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது.இதற்கு ஏற்ற வகையில் ஆளுங்கட்சியான அதிமுக விருப்பமனு பெரும் தேதியை அறிவித்தது. இதனை தொடர்ந்து தற்போது திமுகவும் விருப்பமனுவை பெற்றுக்கொள்ள தேதியை அறிவித்துள்ளது.அதன்படி இன்று காலை 10 மணி முதல் வருகின்ற 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை […]
ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்கிற மாணவி சென்னை ஐஐடியில் முதுகலை படிப்பில் முதலாமாண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிலையங்களைக் […]
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் தேர்தலுக்கான தேதி அறிவிக்கபடவில்லை.இருப்பினும் அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்களை விநியோகம் செய்து வருகிறது.அதன் படி நாளை முதல் தேமுதிக விருப்பமனு பெறலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். மேலும் பூர்த்திசெய்யப்பட்ட விருப்பமனுக்களை வருகின்ற 25-ம் தேதி தேமுதிக மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் கொடுக்கவேண்டும் என கூறினார்.விருப்பமனு பெற மேயர் பதவிக்கு ரூ.15,000மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.4,000 கட்டணம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. […]
அரசியலில் வெற்றிடத்தை ரஜினி காந்த் நிரப்புவார் என்று மு. க. அழகிரி தெரிவித்துள்ளார். கருணாநிதி மறைவிற்கு பின் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் திமுகவில் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் சமீபத்திய பேட்டிகளில் திமுக குறித்த கருத்தை தெரிவிக்க மறுப்பு தெரிவித்து வருகிறார்.அதற்கு ஏற்றவகையில் பேட்டி ஒன்றில் ,நான் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. என்னிடம் ஏன் திமுக பற்றி கேட்கிறீர்கள் என்று […]
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்காக ஆதரவு கொடுத்ததாக சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். தங்களது தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்றம் வழங்கியது.அதில் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியது. மேலும் கர்நாடக மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 05-ம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட […]
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரபேல் விவகாரம் நாடு முழுவதும் சூடு பிடித்து வந்தது.அந்த சமயத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.அப்பொழுது ,ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி.இந்த பேச்சு பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்க்கு மேற்பட்ட மற்றும் 50 வயதிற்கு உட்பட பெண்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்ட நெறிமுறை வருடந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதில், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என சென்ற ஆண்டு, இந்த வழக்கில் செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியானது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் நடைபெற்ற பிரச்சாரம் ஒன்றில், பிரதமர் மோடியை, ரபேல் விவகாரத்தில் காவலாளியே திருடன் என்று விமர்சித்து பேசியுள்ளார். இவரது இந்த பேச்சிற்கு, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கிய வழக்கை உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காவல்துறைக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் தொடர்பாக உள்துறைச் செயலாளர் விசாரிக்க ஆணையிட்டும், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறை எந்தவித விசாரணையும் நடத்தாமல் இருப்பது ஏன்? அதிமுக அரசு ஊழல்வாதிகளை காப்பாற்றுவது இயற்கை. லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, ஊழல் அதிகாரிகளைக் காப்பாற்றுவது ஏன்? pic.twitter.com/aNSkg221A0 — M.K.Stalin (@mkstalin) November 13, 2019 இது தொடர்பாக திமுக […]
வயதாகிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டது, அதனால் சிலர் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனர் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.மேலும் சிவாஜிகணேசன் நிலைதான் கட்சி தொடங்கும் நடிகர்களுக்கு ஏற்படும்.சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களின் கதை வருங்காலத்தில் செல்லாது .விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார், அவரால் என்ன செய்ய முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.39.86 கோடி மதிப்பிலான நடைபாதை வளாகம், சாலை திறக்கப்பட்டது இதனை கோயில் மணியை அடித்து திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி . இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் கூறுகையில்,தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது .உலகத்தரம் வாய்ந்த […]
ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆதரவை நிரூபிக்க ஆளுநர் 18 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆட்சியமைப்பதற்கான ஆதரவு இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆளுநரை அணுகலாம் . பாஜக, சிவசேனா கூட்டணி வென்றால் ஃபட்னாவிஸ் தான் முதல்வர் என தேர்தலுக்கு முன்பே கூறினோம். தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வர் என்றபோது மறுத்து பேசாதவர்கள், தேர்தல் முடிந்தபின் வேறுமாதிரி பேசுவதை ஏற்க […]
அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க முதல்வர் முயற்சி. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழ் மன்றங்கள் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் ஆறு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்காக நிதி ஒதுக்கியுள்ளது .தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.