ஊட்டியில் பழங்குடியின மக்களோடு சேர்ந்து நடனமாடிய ராகுல்காந்தி..!

மோடி குறித்த அவதூறு வழக்கில், ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு பின் அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று தனது வயநாடு தொகுதிக்கு செல்கிறார்.
இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ராகுல் காந்தி அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் கார் மூலமாக சாலை மார்க்கமாக நீலகிரிக்கு வருகை புரிந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பாளிக்கப்பட்டது. இதனையடுத்து, எள்ளநல்லி பகுதியில் உள்ள தனியார் ரிசாட்டில் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
அதன் பின் அங்கு சாக்லேட் தயாரிக்கப்படும் முறையினை ராகுல் காந்தி அவர்கள் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து முத்து நாடுமந்து என்ற தோழர் பழங்குடியின கிராமத்திற்கு சென்ற அவர் பழங்குடியின மக்களின் உடையைஅணிந்து ஆண்கள் மற்றும் பெண்களுடன் இணைந்து நடனம் ஆடினார். இதனை தொடர்ந்து அவர் கூடலூர் வழியாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிக்கு சென்றார்.