200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த கர்நாடகா முதல்வர்..!

Siddaramaiah

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து கடந்த மே மாதம் 20-ஆம் தேதி  சித்தராமையா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் நேற்று கிரக ஜோதி என்ற 200 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தர் ராமையா அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய, கர்நாடகா முதல்வர் Siddaramaiahநாங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடியே இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இன்னும் இந்த திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 2.16 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், 1.42 கோடி குடும்பத்தினர் இணைந்துள்ளனர்.

மேலும், இந்த திட்டத்தில் இணைவதற்கு கால வகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், மேலும் சில லட்சக்கணக்கான குடும்பங்கள் இணையும் என நம்புகிறேன்.   இந்த திட்டத்திற்கு நிதியை மின்துறைக்கு மானியமாக அரசு வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்