நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட டெல்லி சேவைகள் மசோதா, இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பா.சிதம்பரம், டெல்லி சேவைகள் திருத்த சட்ட மசோதா அரசியமைப்புக்கு விரோதமானது. டெல்லி சேவைகள் திருத்த சட்ட மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமைச்சகத்துக்கு தெரியும்.
இதனால் டெல்லி சேவைகள் மசோதாவை கைவிட வேண்டும். விட்டில்கள் நெருப்பு சுடுவதை அறிந்து மீண்டும் மீண்டும் நெருப்பு அருகே செல்கின்றன, ஏனென்றால் அவை விட்டில் பூச்சிகள். அதுபோல தான் மத்திய அரசும். டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்த முதலில் முயன்று தோல்வியை கண்டதும், மீண்டும் முயன்று தோல்வியை சந்தித்தது. மூன்றாவது முறையாக டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்த பாஜக அரசு மேற்கொள்ளும் முயற்சியும் தோல்வி அடையும்.
மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை மாநிலங்களவைக்கு உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்கள் தனி ஒரு தொகுதிக்கு மாறாக ஒரு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்றார்.
