இந்த சோதனைகள் பா.ஜ.க. மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும் – கே.பாலகிருஷ்ணன்

அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் இளைஞர் அணி போல செயல்படுகிறது என கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த சொஅதனைக்கு அரசியல் அத்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் திடீரென சோதனை மேற்கொள்வது கண்டனத்திற்குரியது. இந்த சோதனைகள் பா.ஜ.க. மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தும்.
அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் இளைஞர் அணி போல செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை இருட்டடிப்பு செய்யும் வகையில் சோதனை நடைபெறுகின்றன. மத்திய அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா? அதன் மீது ஏன் நடவடிக்கைகள் இல்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற சோதனைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியையும், வெறுப்பையும் தான் உண்டு செய்யும். இதனால் பாஜகவுக்கு அரசியல் வீழ்ச்சி தான் ஏற்படும். தமிழகத்தில் பா.ஜ.க. நுழைய முடியாது, திமுக-வை இரண்டாக உடைக்க வேண்டும் என்கிற பாஜகவின் நினைப்பு கனவில் கூட நடக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.