இலாகா இல்லாத அமைச்சர் எதற்கு? – ஜெயக்குமார்

ஓபிஎஸ் அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு; விசாரணைக் கைதியாக இருப்பவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும்; இலாகா இல்லாத அமைச்சர் எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அண்ணாமலை தவறை திருத்திக் கொண்டுள்ளார். இனி அதிமுக பற்றி விமர்சனம் செய்ய மாட்டார். ஓபிஎஸ் அவரது மகன் ஆகியோருடன் அதிமுகவுக்கு எந்த தொடர்பும் இல்லை. தனது மகன் வெற்றி பெற்றால் போதும் என நினைத்ததால் தான் ஓபிஎஸ் பணத்தை வாரி இறைத்தார்.