அறிவியல்

Aditya-L1 : சூரியனை நோக்கி முன்னேறி செல்லும் ஆதித்யா… சுற்றுவட்டப்பாதை மீண்டும் உயர்த்தப்பட்டது.!

Published by
மணிகண்டன்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் இரண்டாம்கட்ட சுற்றுவட்டப்பாதையின் உயரம் அதிகரிப்பு வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது  என்று இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவு தளத்திலிருந்து, சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1, பி.எஸ்.எல்.வி.-சி57 ராக்கெட் மூலம் கடந்த வார சனிக்கிழமை (செப்டம்பர் 2) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் இருந்து சரியாக 648 கி.மீ உயரத்தில் பிரிக்கப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து, ஆதித்யா-எல்1 விண்கலம் தனது இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் 16 நாட்கள் இருக்கும்.

இந்த 16 நாட்களில் பூமியின் சுற்றுவட்டப்பாதை மெதுவாக அதிகரிக்கப்பட்டு, பூமியின் ஈர்ப்பு விசை பகுதியை ஆதித்யா எல்-1 கடக்கும். ஆதித்யா-எல்1 மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே தொடங்கிவிட்டது. சோலார் பேனல்கள் செயல்படத் தொடங்கிவிட்டன.

அதனை அடுத்து கடந்த 3.09.2023 அன்று ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டு அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 5ம் தேதி விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயரம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

அதன்படி தற்போது இரண்டாம்கட்டமாக ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை 282 கிமீ x 40225 கிமீ உயர்த்தப்பட்டது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவலின் படி, ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை இரண்டாவது முறையாக பெங்களூரு ISTRAC இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

மொரீஷியஸ், பெங்களூரு மற்றும் போர்ட் பிளேரில் உள்ள ISTRAC/ISROவின் தரை நிலையங்கள் இந்த நடவடிக்கையின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன. எட்டப்பட்ட புதிய சுற்றுப்பாதை 282 கிமீ x 40225 கிமீ ஆகும்.

அடுத்த கட்டமாக செப்டம்பர் 10, 2023 அன்று மதியம் 02.30 மணி அளவில் ஆதித்யாவின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்படும் என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மத மோதல்களை தூண்டும் பேச்சு? மதுரை ஆதீனம் மீது போலீசில் பரபரப்பு புகார்!

மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…

15 minutes ago

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

3 hours ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

3 hours ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

5 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

5 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 days ago