உலகம்

மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள கால்வாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 55 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்த்தில் உயிரிழந்த அனைவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோரப்பட்டுள்ளது. இந்த பேருந்தானது வழக்கமாக குவாத்தமாலா பகுதியில் சான் கிறிஸ்டோபல் அகாசாகஸ் குவாஸ்ட்லான் மற்றும் குவாத்தமாலா நகரத்திற்கு இடையே செல்லும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் […]

#Accident 4 Min Read
Guatemala bus accident

காசா பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் இது தான் நடக்கும்…ஹமாஸ்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்கா : இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரபரப்பு சூழலில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஹமாஸ் கைதியாக வைத்திருக்கும் நபர்களை விடுவிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்த போரில் கிட்டத்தட்ட 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், அங்கு பதட்டமான சூழல் தான் நிலவிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில், தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே […]

Donald Trump 6 Min Read
donald trump angry

AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடி, எலிசி அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அளித்த வரவேற்பு விருந்தில் கலந்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாநாட்டிலும் கலந்துகொண்டார். AI உச்சி மாநாடு செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு 2025, பிப்ரவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]

AI 5 Min Read
PM Modi Meets Macron, JD Vance

பரபரப்பான சூழலில் பிரான்ஸ் & அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லியில் இருந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது, ​​அவர் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருடன் கலந்துரையாடுவார். இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட மோடி, இரு நாடுகள் உடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலில், பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி […]

america 5 Min Read
modi france and us visit

பிரதமர் மோடி தலைமையில் பாரிஸ் AI உச்சிமாநாடு.., முக்கிய விவரங்கள் இதோ.., 

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் AI (செயற்கை நுண்ணறிவு) உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்க்காகவும், பிரான்ஸ் – இந்தியா உறவை மேம்படுத்தும் நோக்கிலும் பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பன்னாட்டு தலைவர்கள் : இந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டிற்கு  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உடன் இணைந்து துணையாக AI மாநாட்டை தலைமை தாங்குவதற்கும் பிரதமர் மோடி சென்று மாநாட்டில் […]

Emmanuel Macron 7 Min Read
Paris AI Summit 2025 - France PM Emmanuel Macron - PM Modi

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், பஞ்சாபின் அமிர்தசரஸில் அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்துவரப்பட்ட, அவர்கள் கைகள் மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு விமானத்தில் பயணம் செய்யப்பட்டதாகவும் அதற்கான புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே விலங்கு அவிழ்க்கப்பட்டது தெரியவந்துள்ளது இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங் தனியார் ஊடகத்திற்கு பேட்டியும் கொடுத்திருந்தார். […]

#USA 7 Min Read
Vikram Misri

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், கொண்டுவரப்பட்ட இந்த விமானம் நேற்று பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், தலைநகர் டெல்லிக்கு பதிலாக பஞ்சாபில் இந்த விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணமாக, எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி வருகின்றன. மத்திய அரசு இதுகுறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை […]

#USA 6 Min Read
Chief Michael W. Banks

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு உயர் பொறுப்பு.! யார் இந்த ஆகாஷ் போப்பா?

அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் அரசாங்க செயல்பாடுகளை நவீனப்படுத்த 19 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆகாஷ் போப்பா உள்ளிட்ட ஆறு தொழில்நுட்ப பொறியாளர்களை நியமித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் மஸ்க் மற்றும் பேபால் இணை நிறுவனர் பீட்டர் தியேலுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு அரசியலில் குறைந்த அனுபவம் இருந்தபோதிலும், DOGE சமீபத்தில் பணியமர்த்திய 19 முதல் […]

DOGE 5 Min Read
Meet Akash Bobba

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு… உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த வேனில் சென்ற 15 விவசாயிகள் உடல் சிதறி பலியாகினர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் 5 பேர் தற்போது உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. துருக்கிய எல்லையிலிருந்து சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் அமைந்துள்ள மன்பிஜில் நடந்த இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. […]

#Syria 4 Min Read
car bomb explosion

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. கட்டடங்கள் மீது மோதி வெடித்து சிதறியதில் 6 பேர் பலி.!

பிலடெல்பியா : அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபிலாடெல்பியா நகரில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று மிசோரிக்கு புறப்பட்டது. அப்போது, புறப்பட சில நொடிகளில் திடீரென அவ்விமானம் விமான நிலையத்திற்கு அருகே இருந்த குடியிருப்புக் கட்டடங்கள் மீது, மோதி வெடித்து சிதறியது. வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில், பிலடெல்பியா நகரில் விமானம் வெடித்து சிதறியபோது, வீடுகள் […]

america 4 Min Read
plane crash in Philadelphia

கனடா, மெக்சிகோவுக்கு 25%., சீனாவுக்கு 10%! அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு […]

#Canada 4 Min Read
US Trump Donald Trump

வாஷிங்டன்: விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்து… 19 பேர் உயிரிழப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்தில் பயணிகள் விமானம், ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதிய விபத்தில் வெடித்து சிதறியது. ரொனால்டு ரீகன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றபோது நடுவானில் ஹெலிகாப்டர் மீது மோதி ஆற்றில் விழுந்தது. பயணிகள் விமானம் மீது மோதிய ஹெலிகாப்டர் அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. மேலும், விமானத்தில் 60 பேர் இருந்தனர். கன்சாஸ் மாகாணத்தில் உள்ள விசிட்டாவில் இருந்து நாட்டின் தலைநகர் வாஷிங்டன் நோக்கி சுமார் […]

#Accident 3 Min Read
America Plane Crash

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! காரணம் என்ன?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவு அறிவித்தார். அவர் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றம்சாட்டி இதனை அறிவித்திருக்கிறார். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் உதவியை தற்காலிகமாக நிறுத்தி, அதனை மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது பாகிஸ்தானில் அமெரிக்க சர்வதேச உதவி முகமை (USAID) மூலம் நடைபெறும் பல முக்கிய திட்டங்கள் நிறுத்த ஒரு காரணமாவும் அமைந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வருடத்திற்கு சுமார் 1.5 பில்லியன் […]

#Pakistan 5 Min Read
Donald Trump Pakistan

AI சாட்போட்டை அறிமுகம் செய்த சீன நிறுவனம்! கடும் இழப்பை சந்தித்த அமெரிக்கா!

சீனா : இன்றயை காலத்தில் AI நுண்ணறிவு வளர்ச்சி என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என சொல்லியே தெரியவேண்டாம். பலரும் OpenAI, Google மற்றும் Meta, உள்ளிட்டவற்றை பயன்படுத்தி  தங்களுடைய வேலைகளை சுலபமாக செய்துகொண்டு வருகிறார்கள். இதனுடைய பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. ஏஐ (AI) துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சாட்ஜிபிடி, ஜெமினி என்று அமெரிக்க நிறுவனங்கள் தான் தங்களுடைய கை வசத்தில் வைத்திருக்கிறது. எனவே, அவர்களை முறியடித்து அவர்களை […]

AI 7 Min Read
falling stocks

மனைவி முன் ஹீரோவாக வேண்டுமா? ‘நானும் ரவுடி தான்’ பாணியில் வினோதமாக பணம் வசூலிக்கும் நபர்!

மலேசியா : சினிமாவில் ஹீரோ எப்படி தனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் வில்லனிடமிருந்து காப்பாற்றுகிறார். அதேபோல், திரைப்படங்களில் வருவதுபோல் வில்லனாக நடிக்க, பணம் வசூலிக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த பெசகிட் சிகார் ககார் மோன்யெட் என்ற நபர். அட ஆமாங்க… சினிமாவைப் போல வாழ்க்கையிலும் ஹீரோவாக வாய்ப்பு கிடைத்தால்? எப்படி இருக்கும். 28 வயதுடைய மலேசிய இளைஞர் ஒருவர் இப்படியொரு விளம்பரம் செய்துள்ளார். அதில், காதலியின் முன் தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், […]

Malaysian Man 4 Min Read
Pesakit Sifar Cacar Monyek

“உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரப்போகிறோம்” அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர் முடியாமல் இருப்பதன் காரணமாக பரபரப்பான சூழலே நிலவி வருகிறது. இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த போருக்கு ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார். கடந்த, சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த டொனால்ட் டிரம்ப், […]

Donald Trump 4 Min Read
Ukraine Russia War

ஹமாஸ் அறிவிப்பு : அடுத்ததாக ரிலீசாகும் 4 இஸ்ரேலிய பெண்கள் இவர்கள் தான்…

காசா : 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்   – ஹமாஸ் போரால் பெரும் பாதிப்புக்கு உள்ளான காசா நகரில் உள்ள பாலஸ்தீன நாட்டு மக்களுக்கு தற்போது இடைக்கால நிவாரணமாக 6 வார கால போர் நிறுத்தம் சற்று ஆறுதலை தந்துள்ளது. இந்த இடைக்கால நிவாரணம் நிரந்தர தீர்வாக இருக்க வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த 6 வார கால போர் நிறுத்தத்தை அடுத்து காசா நகரத்து மக்கள் நீண்ட மாதங்களுக்கு பிறகு தாங்கள் வசித்த […]

#Gaza 5 Min Read
Israel Hamas Ceasefire - Hamas release 4 Israel hostages list

அமெரிக்காவில் ‘இவர்களுக்கு’ பிறப்பால் குடியுரிமை இல்லை? டிரம்ப்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் அதிரடி தடை!

சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார். அதில் பிரதானமானது சட்டவிரோதமாக குடியுரிமை பெறுவதை தடுப்பது மற்றும் ஏற்கனவே சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதாகும். அதில் முக்கிய நகர்வாக, அமெரிக்காவில் பிறப்பால் ஒரு குழந்தை அமெரிக்vvக குடிமகனாக மாறும் நடைமுறையை டிரம்ப் மாற்ற கையெழுத்திட்டுளளார். அதாவது, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை இருவரும் அமெரிக்க குடிமகன்களாகவோ அல்லது அமெரிக்காவில் […]

#USA 6 Min Read
Donald trump

அதிகாலையில் அதிர்ச்சி : மியான்மரில் நிலநடுக்கம்! 4.8 ரிக்டர்.., 106 கிமீ ஆழம்…

நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் 24 ஜனவரி (இன்று) அதிகாலை 12.53 மணியளவில் 4.8 ரிக்டர் எனும் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது […]

#Earthquake 2 Min Read
Earthquake in Myanmar

இந்தோனேசியா நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

ஜாவா : இந்தோனேஷியா 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமாகும். அதில், மத்திய ஜாவா மாகாணத்தில் பெக்கலோங்கன் நகருக்கு அருகில் உள்ள மலைப் பகுதியில் கடந்த ஜனவரி 20 அன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு, பாலங்கள் இடிந்து, கார்கள் மற்றும் வீடுகள் புதைந்தன. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 8 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடல் மற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மோசமான வானிலை மாற்றத்தால் கனமழை, […]

#Indonesia 2 Min Read
Indonesia Landslide