உலகம்

உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது போன்ற ஒரு அரிதான நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கிறதா? என்று உலகமே ஷாக்கிங் ஆக பார்க்கும் வகையில், இரு நாடு அதிபர்கள் வார்த்தை போர் செய்து கொண்டனர். அதாவது, ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் […]

Donald Trump 10 Min Read
Trump Calls Zelensky

நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!

காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே  இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அதிகாலை 2.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் வீடுகளிலிருந்து அலறியபடி வெளியேறினர். ஆனாலும், தற்போது வரை பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. காத்மாண்டுவிலிருந்து 65 கி.மீ கிழக்கே உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் […]

#Bihar 3 Min Read
Earthquake Magnitude Strikes Nepal

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக, அவர் EU இல் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். திடீரென டொனால்ட் ட்ரம்ப் இப்படி கூறியிருப்பது அமெரிக்கா மற்றும் EU இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது. வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேசிய டொனால்ட் ட்ரம்ப் “ஐரோப்பிய ஒன்றியம் (EU)  அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, […]

Donald Trump 6 Min Read
european union donald trump

பதில் சொல்லுங்க., இல்லைனா வேலையை விட்டு போங்க.., அரசு ஊழியர்களிடம் ‘கறார்’ காட்டும் எலான் மஸ்க்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர பிரச்சாரமும், தேர்தல் பிரச்சார நிதி உதவிகளும். டிரம்ப் அதிபரான பிறகு அமெரிக்க அரசாங்க பணபரிவர்தனைகளை கட்டுப்படுத்தும் DOGE எனும் அமைப்பின் தலைவராக உலக பணக்காரரான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். இதற்கு சில எதிர்ப்புகள் எழுந்தாலும் அந்த பொறுப்பில் அடுத்தடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டிரம்பிற்கு மிக நெருக்கமாக அமெரிக்க அரசு செயல்பாட்டில் ஈடுபட்டு […]

#USA 6 Min Read
US President Donald Trump - Elon musk

இவ்வாறு நடந்தால் பதவி விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு!

கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி, இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்’ என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். டிரம்ப் அவ்வாறு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ராஜினாமா செய்ய தயார் என உக்ரைன் அதிபர் அறிவித்திருக்கிறார். […]

Donald Trump 4 Min Read
Volodymyr Zelenskyy

ச்சீ, இதுதான் காரணமா? எலான் மஸ்க் மகனால் டிரம்ப் அலுவலகத்திற்கு புதிய மேஜை?

வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க வைக்கின்றன. இதனால் அவர் செய்யும் சின்ன சின்ன விஷயம் கூட பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. அதற்கொரு உதாரணமாக தற்போது ஒரு சம்பவம் நிகந்துள்ளது. அதாவது, வாஷிங்டன்னில் உள்ள ஓவல் மைதானத்தில் இருக்கும் தனது மேஜையை டொனால்ட் டிரம்ப் மாற்றுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ஒரு புதிய ஜனாதிபதி பொறுப்பேற்ற உடன், தனக்கு பிடித்த அலுவலக மேஜையை 7 பாரம்பரிய […]

Donald Trump 6 Min Read
Donald Trump and Elon musk son

மீண்டும் மீண்டுமா… ‘கொரோனா போலவே புதிய வைரஸ் தொற்று’ – சீனா விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

பெய்ஜிங் : கொரோனா காலத்தை யாரு தான் மறக்க முடியும்? அந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா அச்சத்தை பார்த்து எத்தனை பேர் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா தொற்று போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். […]

#China 6 Min Read
Covid HKU5

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல் கதவுகள் வழியாக, உதவி கேட்டு நின்றிருந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரான், இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் பனாமாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதில் சிலர் தங்கள் ஹோட்டல் அறை ஜன்னல்களில் உதவி […]

#Indians 5 Min Read
Indians - Panama

இந்தியாவுக்கு மட்டும் வரி விதிப்பில் ‘கருணை’ காட்ட முடியாது! டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பபை உயர்த்தி அதன் மூலம் நாட்டின் வருவாயை பெருக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இறக்குமதி வரி : இதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட அமெரிக்க பயணத்தில், அவரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க இறக்குமதி வரி விதிப்பு தொடர்பான […]

#USA 7 Min Read
Donald Trump - PM Modi

“நாம் ஏன் இந்தியாவுக்கு பணம் தர வேண்டும்? அங்கு பணம் இருக்கிறது” – அதிபர் ட்ரம்ப்.!

வாசிங்டன் : இந்தியாவில் “வாக்காளர் வாக்குப்பதிவு”-க்காக நியமிக்கப்பட்ட 21 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ரத்து செய்வதற்கான எலோன் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறையின் (DOGE) முடிவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரித்துள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக கட்டணங்களைக் கருத்தில் கொண்டு அந்த பெரும் நிதி உதவியின் அவசியம் பற்றி கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், “இந்தியாவுக்கு நாம் ஏன் ரூ.182 கோடி ($21M)  தர வேண்டும்? வர்களிடம் நிறைய […]

#USA 4 Min Read
Trump -PM MODI

தரையிறக்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! 18 பேர் காயம்…

கனடா : கனடாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும்போது தலைக்குப்புற கவிழ்ந்ததில் பலர் காயமடைந்தனர். டெராண்டோ பியர்சன் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய டெல்டா 4819 விமானம், பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்தை தொடர்ந்து பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டனர். மேலும், அதில் பயணம் செய்த 76 பயணிகள் 4 ஊழியர்கள் என, மொத்தம் 80 பேர் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 18 பேர் காயமும் மூன்று பேர் […]

#Canada 3 Min Read
Delta flight that crashed

இதை அவரு கேட்டாருன்னா ஷாக் ஆகிடுவாரு… தவளைக்கு ‘டைட்டானிக்’ நடிகர் பெயரை சூட்டிய ஆராய்ச்சியாளர்கள்.!

தென் அமெரிக்கா : ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது.  தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் […]

FROG 4 Min Read
A New Frog Species Named Leonardo DiCaprio

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் : இரு தரப்பில் விடுவிக்கப்படும் பணய கைதிகளின் விவரம் இதோ…

டெல் அவிஸ் : நீண்ட மாதங்களாக தாக்குதலில் ஈடுபட்டு வந்திருந்த இஸ்ரேல் – ஹமாஸ் தரப்பு பன்னாட்டு மத்தியஸ்தலத்தை அடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் இடைக்கால போர்நிறுத்ததை கடைபிடித்து வருகிறது. இருந்தும் அங்காங்கே காசா நகரில் சில இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக ஹமாஸ் தரப்பு குற்றம் சாட்டி வந்தது. இதனால் இந்த வாரம் (இன்று) விடுவிக்க வேண்டிய இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்க மாட்டோம் என முதலில் ஹமாஸ் தரப்பு கூறியது. இதனை […]

#Gaza 5 Min Read
Israel Hamas Ceasefire

செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்.! உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…

செர்னோபிள் அணு உலை மீது கட்டப்பட்டிருந்த கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதியே தீப்பற்றி எரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீதான ரஷியாவின் தாக்குதலால், அணு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளது. இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியே உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை உலக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக நிபுணர்கள் கருதுகின்றனர். செர்னோபில் அணு உலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கவசம் […]

Chernobyl 5 Min Read
Chernóbyl - Zelenski

விண்வெளி நினைவு பரிசு., புத்தகங்கள்.! பரிசுகளை பரிமாறிக்கொண்ட பிரதமர் மோடி – மஸ்க்!

வாஷிங்டன் : பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட  உள்ளிட்ட முக்கிய அமெரிக்கா அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்தார். அதனை தொடர்ந்து, பன்னாட்டு தொழிலதிபரும், அமெரிக்காவின் அரசு செயல்துறையான DOGE அமைப்பை வழிநடத்தும் நபராகவும் உள்ள எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பானது, வாஷிங்டன் பிளேர் ஹவுஸில் நடைபெற்றது. அப்போது மஸ்க் தனது 3 குழந்தைகளுடனும் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மஸ்கின் நியுராலிங் (Neuralink ) […]

Donald Trump 5 Min Read
Elon Musk - PM Modi

பதிலுக்கு பதில் வரி விதிப்போம்.., இந்தியாவில் தான் அதிக வரி! டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்காவில் விலைவாசி உயர்வு, அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரசனைகளை முன்னிறுத்தி அமெரிக்க அதிபர் தேர்தலை சந்தித்தார் டொனால்ட் டிரம்ப். தற்போது வெற்றிபெற்ற பிறகு அதற்கான அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு தற்போது வரி விகிதங்களை மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு வரியோ, அதே அளவு வரி…, அதாவது, அமெரிக்க பொருட்களுக்கு வெளிநாடுகளில் அந்தந்த நாட்டு அரசு என்ன இறக்குமதி வரி […]

#USA 10 Min Read
PM Modi - US President Donald Trump

“மோடி நீண்ட வருட நண்பர்..,  வாழ்த்துக்கள் டிரம்ப்..,” நட்பை பரிமாறிக்கொண்ட இருநாட்டு தலைவர்கள்! 

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்க புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி துளசி கபார்ட்டை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினார். அதனை தொடர்ந்து நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பு நிகழ்ந்தது.  இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். சந்திப்பு : வெள்ளை மாளிகைக்கு வந்த பிரதமர் […]

Donald Trump 7 Min Read
PM Modi - Donald Trump

முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!

ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் பொறுப்பேற்பதற்கு முன்பு போரை முடிவுக்கு கொண்டு வர அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய தகவலை தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி மூலம் உரையாடி, […]

Donald Trump 4 Min Read
russia ukraine war Donald Trump

“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !

காசா : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு எச்சரிக்கை விடுத்து பேசியியிருந்த நிலையில், மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் என ஹமாஸ் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தது. இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருக்கிறார். பிரச்சினை  இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், இஇரு அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இருந்தது. இந்த ஒப்பந்தத்தின் […]

Donald Trump 8 Min Read
israel

“இங்கு தான்..,” சாவர்க்கர் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற பாரிஸ் AI உச்சி  மாநாட்டில் பங்கேற்றார். இந்த உச்சி மாநாட்டில்  பிரதமர் மோடியும் தலைமை தாங்கி உரையாற்றினார் என்பது குறிப்பிட தக்கது. இந்த நிகழ்வில்,  பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உருசுலா வான் டெர் லேயன், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி […]

PARIS 5 Min Read
modi