செர்னோபில் அணு மின் நிலையம் மீது ரஷ்யா தாக்குதல்.! உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…

செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது ஆளில்லா ட்ரான் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Chernóbyl - Zelenski

செர்னோபிள் அணு உலை மீது கட்டப்பட்டிருந்த கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீது ரஷியா வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அப்பகுதியே தீப்பற்றி எரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பு மீதான ரஷியாவின் தாக்குதலால், அணு கதிர்வீச்சு அபாயம் இருப்பதாக உலக நாடுகள் அச்சமடைந்துள்ளது.

இந்த தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியே உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் இந்த தாக்குதலை உலக பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக நிபுணர்கள் கருதுகின்றனர். செர்னோபில் அணு உலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கவசம் மீது, ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சர்வதேச விதிகளை மீறி ரஷ்யா அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இது முழு உலகிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற தாக்குதல்கள் உலகளாவிய பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும், உடனடி பதில் தேவை என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதல் குறித்த உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, செர்னோபில் ஆலையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக தீயணைப்பு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இந்த சம்பவம் மிகப்பெரிய ஆபத்துகள் குறித்து உலகிற்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1986ல் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்ட போது அதிலிருந்து அணு கதிர்வீச்சு வெளிவராமல் இருக்க, பாதுகாப்பு கவசம் அமைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்