உலகமே பார்த்து ஷாக்… டிரம்ப் – ஜெலன்ஸ்கி கடும் மோதல்.! வெள்ளை மாளிகையில் என்னதான் நடந்தது?

நீங்கள் 3ஆம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார்.

Trump Calls Zelensky

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது, காரசாரமான விவாதம் நடைபெற்றது. இது போன்ற ஒரு அரிதான நிகழ்வு இதற்கு முன் நடந்திருக்கிறதா? என்று உலகமே ஷாக்கிங் ஆக பார்க்கும் வகையில், இரு நாடு அதிபர்கள் வார்த்தை போர் செய்து கொண்டனர்.

அதாவது, ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது.

இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் ஒரு கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், இது சமாதான ஒப்பந்தத்திற்கு முக்கியமானது என்று டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், ஜெலென்ஸ்கியின் தவறான நடத்தையை டிரம்ப் குற்றம் சாட்டியதோடு, அவரது நடவடிக்கை மூன்றாம் உலகப் போருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை காரசார விவாதமாக மாறியது.

இது போன்ற சென்சிட்டிவான சந்திப்பு மீடியா முன்னிலையில் நடந்திருக்க கூடாது. அதில் எங்களுக்கு பெரிய வருத்தம் தான் டிரம்ப் உடனான வார்த்தைப் போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

ட்ரம்ப்

உக்ரைன் பெரிய சிக்கலில் உள்ளது, நீங்கள் அதை வெல்ல முடியாது. ஆனால் நீங்கள் எங்களுடன் இருந்தால், அதிலிருந்து வெளியேற உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். மூன்றாம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். போரில் நீங்கள் வெல்லவில்லை. 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது.

உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். அது மட்டும் இல்லை என்றால் போர் 1 வாரத்தில் போர் முடிந்திருக்கும். நான் ரஷ்யா மற்றும் உக்ரைன் நடுவில் கொண்டு வரவில்லை என்றால், நீங்கள் ஒருபோதும் ஒரு ஒப்பந்தத்தை செய்ய மாட்டீர்கள்.

நீங்கள் புதினை வெறுக்கிறீர்கள், நான் கடுமையாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். உலகில் உள்ள வேறு எவரையும் விட நான் கடுமையாக இருக்க முடியும். ஆனால் நீங்கள் அந்த வழியில் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முடியாது.

இறுதியில், நன்றி இல்லாமல் நடந்து கொள்வதாக உக்ரைன் அதிபர் மீது குற்றம் சாட்டிய டிரம்ப், உக்ரைன் குழுவினரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

ஜெலன்ஸ்கி

பாதுகாப்பு குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, “பாதுகாப்பு உத்தரவாதம் மற்றும் போர் நிறுத்தம் பற்றியது என்றால், போர் நிறுத்தம் பற்றிப் பேசவே முடியாது. ஏனெனில் அது ஒருபோதும் பயனளிக்கவில்லை. புதின் 25 முறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளார். 2016 இல் (டிரம்ப்) அதிபராக இருந்தார், எனவே போர் நிறுத்தம் பற்றி இப்பொது பேச முடியாது. பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் அது எந்தப் பயனும் இல்லை” என்று அவர் கூறினார்.

அமெரிக்காவை அவமதித்த ஜெலன்ஸ்கி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,” உக்ரைன் போர் முடிவுக்கு வருவதை அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி விரும்பவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா இருப்பதை பயன்படுத்தி, அவர் பேரம் பேச நினைக்கிறார். அமெரிக்க அதிபரின் ஓவல் அலுவலகத்திலேயே அவர் அமெரிக்காவை அவமதித்துவிட்டார். அவர் எப்போது அமைதியை விரும்புகிறாரோ, அப்போது மீண்டும் அமெரிக்கா வரலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரஸ் மீட்டில் டிரம்ப்

ரஷ்யாவுடனான டிரம்பின் வளர்ந்து வரும் நல்லுறவை ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பினார், மேலும் புடினின் வாக்குறுதிகளை நம்புவதற்கு எதிராக எச்சரித்தார், இதனால் இந்த விவகாரம் ஒரு முழுமையான சர்ச்சையாக மாறியது. இந்த சூடான வாக்குவாதத்திற்குப் பிறகு, டிரம்ப் சந்திப்பை முன்கூட்டியே முடித்துக்கொண்டார், மேலும் ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai