மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 42533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1373 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.எனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் உள்ள ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இந்த நேரங்களில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இடையில் 2020-2021 -ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மே […]
பள்ளிகள் திறப்பது எப்போது ? என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளி ,கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.மே 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.இது ககுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கொரோனா வைரஸ் பிரச்சனைகள் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் […]
ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடம் கற்க பள்ளிக்கல்வித்துறை சிறப்பு இணையதளத்தை உருவாக்கி உள்ளது. கொரோனா பாதிப்பு காரமாக தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது.இதனால் போக்குவரத்து சேவை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் பல மாநிலங்களில் 1 முதல் 9 வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், பல கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், முதற்கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டபோது 10 […]
வருகின்ற 21-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை நடத்தவேண்டும் என்று உத்தரகண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்விநிலையங்களை மூட உத்தரவு பிறப்பித்தது. இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க உத்தரகண்ட் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.அதாவது , வருகின்ற 21-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள், மாநில அளவிலான பல்கலைக்கழகங்கள், அவற்றின் […]
பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஷின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மே 3-ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் வருகின்ற 20-ஆம் தேதி வரை ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் மாநில அரசுகளும் முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.பணியாளர்கள் […]
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்தது. மேலும் அனைத்து அரசு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. பின் குஜராத்தில் 10 மற்றும் […]
உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் மார்ச் 23 -28 ஆம் தேதி வரை தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் […]
கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் ஆனந்த்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான சத்துணவை தயாரித்து வீடுகளுக்கு சென்று வழங்க […]
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் வருகிறது. தற்போது இந்தியாவில் பரவ தொடங்கி கொரோனா வைரசால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 90-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய , மாநில அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை […]
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு மார்ச் 31-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக துணைவேந்தர் தாஸ் தெரிவித்துள்ளார்.மார்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.தமிழகம் மட்டும் அல்லாது கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் எல்.கே.ஜி. முதல் 5ஆம் வகுப்பு வரை நாளைமுதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் […]
எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் படிக்கும் LKG, UKG மாணவர்களுக்கு வருகின்ற 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. பின் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் LKG, UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இந்த குழப்பங்களுக்கு மத்தியில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.அதாவது, கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது […]
கேரளாவில் கொரோனாவால் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், சத்துணவை நம்பி இருக்கும் மாணவர்களுகளின் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் ,கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்தது.இந்தியாவில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி […]
தமிழகத்தில் 25 புதிய தொடக்க பள்ளிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி இன்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவிப்புகளை அறிவித்தார்.அவரது அறிவிப்பில், வரும் கல்வி ஆண்டில், ரூ.5.72 கோடியில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். மேலும், 10 அரசு தொடக்கப் பள்ளிகள் ரூ.3.90 கோடியில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இன்று தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அப்பொழுது, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தான் சரி என்றால் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாதது ஏன்? என்று திமுக உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உலக அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க பொதுத்தேர்வு அவசியம். வேறு வழியே இல்லாமல் தான் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்தோம் என்று தெரிவித்தார்,
காஷ்மீரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .மேலும் காஷ்மீரில் மார்ச் 31-ம் தேதி வரை பயோமெட்ரிக் வருகை பதிவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு இன்று முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், தமிழகம், புதுவையில் இன்று முதல் 12 வகுப்பு தேர்வு எழுதும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். வாழ்வில் அடுத்த கட்ட உயர்வுக்கான தேர்வை நம்பிக்கையுடன் சந்தித்து வெல்லவும், உங்கள் எதிர்காலக் கனவுகள் நிறைவேறவும் அன்பும், அக்கறையும் கொண்ட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வன்முறை காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் டெல்லி வன்முறை எதிரொலியாக இன்று ( பிப்ரவரி 28-ஆம் தேதி ) மற்றும் நாளை நடக்க […]