முக்கியச் செய்திகள்

இந்திய அணி தோல்வியால் 2 ரசிகர்கள் தற்கொலை..!

Published by
murugan

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை தாங்கமுடியாமல்  இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இடங்களில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவின் பெலியத்தோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ராகுல் லோகர் (23) என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்  தெரிவித்தன. ராகுலின் உறவினர்  ஒருவர் கூறுகையில், அவர் அப்பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்வதாகவும், இறுதிப் போட்டியைக் காண ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்ததாகவும் கூறினார்.

அவுஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்ததைக் கண்டு வருத்தமடைந்து தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். அதே நேரத்தில், ஒடிசாவின் ஜாஜ்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு போட்டி முடிந்தவுடன் பிஞ்சர்பூர் பகுதியில் உள்ள தேவ் ரஞ்சன் தாஸ் என்ற 23 வயது இளைஞர் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய தற்கொலை செய்துகொண்டார்.

தாஸின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘மனநிலை தொடர்பான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இறுதிபோட்டியில் இந்தியா தோல்வியடைந்ததையடுத்து தாஸ் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

Published by
murugan

Recent Posts

“மதுரை மக்களுக்கு ஒரு வேண்டுகோள்!” தவெக தலைவர் விஜயின் முதல் பேட்டி!

சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…

4 minutes ago

வாட்டி வதைக்க காத்திருக்கும் வெயில்! வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய தகவல்!

சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…

37 minutes ago

”அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி” – மத்திய அரசின் புதிய உத்தரவு.!

டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…

58 minutes ago

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கு நிம்மதி! மத்திய அரசு அளித்த முக்கிய தளர்வு..,

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

‘ரெட்ரோ’ ரிலீஸ்: தாரை தப்பட்டை கிழிய பால் அபிஷேகம்.., ரசிகர்கள் கொண்டாட்டம்.!

சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…

2 hours ago

அதிகரிக்கும் வெயில்.., பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அப்டேட்!

திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…

3 hours ago