பஞ்சாப் அணியில் இருந்து டெல்லி அணிக்கு குடியேறிய அஸ்வின் ..!

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக அஸ்வின் கடந்த இரண்டு தொடர்களில் இருந்து வந்தார்.இவர் கேப்டனாக விளையாடிய 28 போட்டிகளில் 25 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.
இவர் கேப்டனாக செயல்பட்ட இரண்டு தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி லீக் சுற்றியே வெளியேறியது.இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , பயிற்சியாளருமான அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டார்.
இவர் அஸ்வினை பஞ்சாப் அணியிலே தக்கவைத்து கொள்ள வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.இது குறித்து பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா கூறுகையில் , நாங்கள் அஸ்வினை டெல்லி அணிக்கு மாற்றவில்லை அவர் பஞ்சாப் அணியிலே தொடருவார் என கூறியிருந்தார்.
இந்நிலையில் அஸ்வினை டெல்லி அணி 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.அணிவீரர்களை மாற்றிக்கொள்வதற்கான கெடு வருகின்ற 14-ம் தேதியுடன் முடிகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025