ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023: இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்.! முழு விவரம்….

Published by
கெளதம்

25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் நடந்து வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழா ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 16ஆம் தேதி நிறைவடைகிறது.

கொரோனா காரணமாக சீனாவின் ஹாங்சோவில் 2021ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது நடைபெறுகின்றன.

இதன் இரண்டாம் நாளான நேற்று ஒரே நாளில் 3 தங்க பதக்கங்களை வென்றனர். புள்ளி பட்டியலில் இந்தியா மூன்று தங்கப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், ஜப்பான் முதல் இடத்திழும் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது.

Asian Athletics Championships 2023 [File Image]

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023ல் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்:

அதன்படி, ஜோதி யர்ராஜி பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் பதக்கம், அஜய் குமார் சரோஜ் ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் பதக்கம், அப்துல்லா அபூபக்கர் ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கம் பதக்கம், அபிஷேக் பால் ஆடவருக்கான 10000மீ ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம், ஐஸ்வர்யா கைலாஷ் மிஸ்ரா 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் பதக்கம், தேஜஸ்வின் சங்கர் ஆடவருக்கான டெகாத்லான் பிரிவில் வெண்கலம் பதக்கம் என மொத்தம் இந்தியாவுக்கு நேற்று மட்டும் 6 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

Jyoti Yarraji [Image source : Twitter: @Media_SAI]

ஜோதி யர்ராஜி:

பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார். 100 மீட்டர் தடை ஓட்டத்தில்  இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்று இந்திய தடகளப் போட்டியில் ஜோதி யர்ராஜி சாதனை படைத்தார்.

Ajay Kumar Saroj [Image source : Twitter: @Media_SAI]

அஜய்குமாா் சரோஜ்:

அடுத்ததாக, ஆடவருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் அஜய்குமாா் சரோஜ் 3 நிமிஷம் 41.51 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றாா். இவர் நேற்று இரண்டாம் இந்தியாவின் இரண்டாம் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Abdulla Aboobacker [Image source : Twitter: @Media_SAI]

அப்துல்லா அபூபக்கர்:

மேலும், ஆடவருக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் அப்துல்லா அபூபக்கர் 16.92 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார். இவர் நேற்று இந்தியா சார்பில் மூன்றாம் தங்கப் பதக்கத்தை வென்றார்.

Abhishek Pal [Image source : Twitter: @Media_SAI]

அபிஷேக் பால்:

10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 29 நிமிடம் 33.26 வினாடிகளில் இலக்கை கடந்து அபிஷேக் பால் 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். இந்தாண்டு ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Mishra [Image source : Twitter: @Media_SAI]

ஐஸ்வர்யா மிஸ்ரா: 

பெண்களுக்கான 400 மீ ஓட்டத்தில் ஐஸ்வர்யா மிஸ்ரா 53.07 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார்.

Tejaswin Shankar [Image source : Twitter: @Media_SAI]

தேஜஸ்வின் சங்கர்:

ஆடவருக்கான டெகாத்லான் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் 7527 புள்ளிகள் முன்னேறி வெண்கலம் வென்றார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வெல்வது ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தயாராகும் ஒரு படி முன்னேற்றம் என்று கூறிஉள்ளார் தேஜஸ்வின் சங்கர்.

Published by
கெளதம்

Recent Posts

பாஜக, திமுக நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் – விஜய் அறிக்கை.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…

9 minutes ago

தாய்லாந்து – கம்போடியா இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்.!

மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…

40 minutes ago

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

1 hour ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

2 hours ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

2 hours ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

2 hours ago