சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி தொடங்கியது!

chennai Asian Hockey

2023 ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜப்பான், கொரியா அணிகள் மோதும் முதல் போட்டியில், இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்க போட்டிகள் தொடங்கியது. 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சர்வதேச போட்டி நடப்பதால் விளையாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இன்று தொடங்கிய ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியானது ஆகஸ்ட் 12-ஆம்  நடைபெற உள்ளது. ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், கொரியா, சீனா, மலேசியா, ஜப்பான் ஆகிய 6 அணிகள் பங்கேற்கவுள்ளனர். இந்திய ஹாக்கி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது. மேலும், இந்தியா – பாகிஸ்தான் ஆட்டமானது ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்