#BREAKING : என்எல்சி நிறுவனத்தின் முன் போராட்டம் நடத்த அனுமதியில்லை – உயர்நீதிமன்றம்

என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
என்எல்சி தலைமை அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த போராட்டத்தை சட்ட விரோதமாக அறிவித்து, இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அலுலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குறிப்பாக பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என என்.எல்.சி நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தொழில்சங்கம் தரப்பில் தாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாகவும், யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்திருந்தனர்.
என்எல்சி தரப்பில், என்எல்சி தலைமை அலுவலகத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்கள். எனவே, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, சட்டத்தை கையிலெடுத்து நீங்கள் போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. காவல்துறை குறிப்பிடும் இடங்களில் மட்டும் தான் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியும்.
மேலும், எந்தெந்த இடங்களில் போராட்டம் நடத்தலாம் என்று கண்டறிய வேண்டும் என கடலூர் எஸ்.பி-க்கு உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் நீதிமன்ற உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!
July 14, 2025