ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்” போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே 63 ரன்களும், உஸ்மான் கவாஜா 42 ரன்களும், வார்னர் 38 ரன்களும், மிட்செல் மார்ஷ் 41 ரன்களும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 264 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தானில் அதிகபட்சமாக அப்துல்லா ஷபீக் 62, கேப்டன் ஷான் மசூத் 54, முகமது ரிஸ்வான் 42, அமீர் ஜமால் 33 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டையும், நாதன் லியோன் 4 விக்கெட்டையும் பறித்தனர்.
இதற்கிடையில் 54 ரன்கள் முன்னிலை உடன் ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு 2-வது இன்னிங்ஸில் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. தொடக்க வீரர்களாக உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய இரண்டு பந்திலே உஸ்மான் கவாஜா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த மார்னஸ் லாபுஸ்சாக்னே 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இருப்பின் மறுபுறம் விளையாடி வந்த டேவிட் வார்னர் ஆறு ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டிராவிஸ் டக் அவுட் ஆனார். இதனால் ஆஸ்திரேலியா 16 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து கொடுத்தது. பின்னர் மிட்செல் மார்ஷ், ஸ்மித் இருவரும் ஜோடி சேர்ந்து சரிவில் இருந்த அணியை நிதானமாக விளையாடி அணியை மீட்டுக் கொண்டு வந்தனர் இதில் சிறப்பாக விளையாடிய மிட்செல் மார்ஷ் 130 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்து சத்தத்தை தவறவிட்டு வெளியேறினார் அதில் 13 பவுண்டரை அடங்கும்.
மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த ஸ்மித் அரைசதம் அடித்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 62.3 ஓவரில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 187 ரன்கள் எடுத்து 241 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…