மகளிர் உலகக்கோப்பை:ஸ்மிருதி,பூஜா வஸ்த்ரகர் அதிரடி-பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்கு!

Published by
Edison

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில்,மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியானது நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் காலை முதல் நடைபெற்று வருகிறது.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.இதனையடுத்து,இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா,ஷஃபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். ஆனால், வந்த வேகத்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் ஷஃபாலி வெளியேற தீப்தி சர்மா களமிறங்கி நிதானமாக விளையாடி அணிக்கு  ரன்கள் சேர்த்தார்.ஆனால்,21 வது ஓவரில் நஷ்ரா சந்துவின் பந்து வீச்சில்  40 ரன்கள் எடுத்த நிலையில்  விக்கெட்டை பறிகொடுத்தார்.

மறுபுறம் ஸ்மிருதி 3 பவுண்டரி ,ஒரு சிக்சர் என அதிரடியாக விளையாடி அணிக்கு மேலும் ரன்களை சேர்த்து கொண்டிருக்க 52 ரன்களில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

அவரை தொடர்ந்து,ஹர்மன்ப்ரீத் கவுர் 5 ரன்களிலும்,ரிச்சா கோஷ் 1 ரன்னிலும்  வெளியேறினர்.மேலும்,கேப்டன் மிதாலியும் 9 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.அதன்பின்னர்,சினே ராணா ,பூஜா வஸ்த்ரகர் களமிறங்கி அதிரடி காட்டினர்.

இறுதியில்,50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 244 ரன்கள் எடுத்துள்ளது.அதிகபட்சமாக,பூஜா 8 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்துள்ளார்.சினே ராணா 53 ரன்கள்(*).

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக நிதா தர்,நஷ்ர சந்து ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,பாகிஸ்தான் அணிக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,அணியின் தொடக்க வீரர்களாக சித்ரா அமீன் ஜவேரியா கான் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

 

 

Recent Posts

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

Live : கத்திரி வெயில் தாக்கம் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…

29 minutes ago

தீவிரவாதிகளுக்கு உதவிய இளைஞர்? காஷ்மீர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு! பரபரப்பான வீடியோ இதோ..

காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…

1 hour ago

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

3 hours ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

3 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago