#IPL1000: ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டி..! மும்பையுடன் மோதுகிறது RR..!

ஐபிஎல் 2023 தொடரின் 1000-வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 விரைவில் அதன் 1000-வது போட்டியை எட்டவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, ஐபிஎல்-ல் மொத்தம் 958 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் 41 மற்றும் 42-வது போட்டியில், 42-வது போட்டியானது ஐபிஎல் வரலாற்றில் 1000-வது போட்டியாகும். இது ஐபிஎல்-ன் பிரமிக்க வைக்கும் சாதனையாகும். .
இந்த 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக, இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் பிசிசிஐ ஒரு சிறிய கொண்டாட்டத்தை நடத்தும். இந்த நிகழ்வு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைபெறும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025