தொடர்ச்சியாக 5-வது அரைசதம்.. 20,000 ரன்கள்- மிதாலி ராஜ் சாதனை..!
மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இன்று முதல் ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 61 ரன்கள் எடுத்தார். இதனால், மிதாலி ராஜ் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்துள்ளார். மேலும், மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இந்த போட்டிக்கு முன் மிதாலி ராஜ் இங்கிலாந்துக்கு எதிராக 75*, 59 , 72 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 79 ரன்கள் எடுத்தார்.