இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 297 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்து இருந்தது.
களத்தில் கேப்டன் ஹோல்டர் 10 ரன்னுடனும் , கம்மின்ஸ் ரன் எடுக்காமலும் களத்தில் நின்றனர். பின்னர் நேற்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஹோல்டர் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் கம்மின்ஸ் 95 நிமிடங்கள் களத்தில் நின்று 46 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்கவில்லை, பிறகு ஜடேஜா வீசிய சுழல் பந்தில் போல்டானார்.
இதற்கு முன் 1999-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஜெஃப் அலாட் 101 நிமிடங்கள் களத்தில் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் இந்த சாதனையை செய்து இருந்தார்.அடுத்த இடத்தில் கம்மின்ஸ் உள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…