நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடந்த 20 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதியத. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. அடுத்ததாக 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து. இதனால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது, சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய ஹைதராபாத் அணி ஒரு ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். பின்னர் இறங்கிய டெல்லி அணி 8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்த போட்டிக்கு பிறகு டெல்லி அணியின் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ட்வீட்டர் பக்கத்தில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்வீட்டரில் கூறியிருப்பது ” நான் இந்த ஆண்டு ஐபிஎல் நாளை முதல் ஓய்வு பெறுகிறேன், குடும்ப உறுப்பினர்களும், உறவினர்களும் கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் இக்கட்டான நிலையில், அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். நிலைமை சரியாகும் பட்சத்தில், மீண்டும் விளையாட வருவேன்” என்றும் தெரிவித்துள்ளார்
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…