ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3 ஆம் ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று சிட்னியில் நடைபெற்ற 3 ஆம் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 54 ரன்களும், மத்தேயு வேட் 80 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.
187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் – தவான் களமிறங்கினார்கள். இவர்களின் தொடக்கம் சிறப்பாக அமையும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் பந்திலே கே.எல்.ராகுல் தாது விக்கெட்டை இழந்தார். அவரையடுத்து களமிறங்கிய கேப்டன் கோலி, அதிரடியாக ஆடிவந்தார்.
மத்தியில் இருந்த தவான் 28 ரன்களில் வெளியேற, மத்தியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். மத்தியில் ஆடிய கோலி அரைசதம் விலாச, அவரையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் டக்-அவுட் ஆக, அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். சிறப்பாக ஆடிவந்த பாண்டியா 20 ரன்கள்அடித்து தனது விக்கெட்டை இழக்க, 85 ரன்கள் அடித்து விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்து, 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. ஏழினும், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…