#AUSvIND: ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி ? இன்று கடைசி போட்டி

டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இன்று கடைசி டி-20 போட்டி நடைபெறுகிறது.
கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் ,தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இன்று கடைசி டி-20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டி-20 தொடரை 3-0 கணக்கில் கைப்பற்றும்.ஆனால் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றிபெற போராடும் என்பதில் ஆச்சரியமில்லை.பின்னர் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் :
ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர் , வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், முகமது ஷமி, நடராஜன்,சைனி,மயங்க் ,மனிஷ் பாண்டே ,சாகல் ,பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025