ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 22-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 359 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது ஆனால் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்தது.
பரிதாபமான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.காரணம் முதல் இன்னிங்சில் 67 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனதால் இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற வாய்ப்பு குறைவு என பலர் கூறினர்.
அவர்களின் நினைப்பை பென் ஸ்டோக்ஸ் தகர்ந்து எறிந்தார். நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 135 ரன்கள் குவித்ததன் மூலம் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.இந்நிலையில் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் திருப்பு முனையாக அமைந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
மேலும் கடந்த 40 நாள்களில் 3 முறை ஆட்டநாயகன் விருதை வாங்கி உள்ளார். உலகக்கோப்பையில் இறுதி போட்டியிலும் , ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…