#IPL2020: சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.!

Published by
murugan

இன்றைய 29-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

சென்னை அணியின் தொடக்க வீரர்களாக சாம் கரண், டு பிளெசிஸ் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலே டு பிளெசிஸ் டக் அவுட் ஆனார். இதைத் தொடர்ந்து, ஷேன் வாட்சன் களமிறங்கினார்.

சிறப்பாக விளையாடி வந்த சாம் கரண் 31 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், அம்பதி ராயுடு இறங்க வாட்சன் உடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். சிறப்பாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் அடிக்காமல் அம்பதி ராயுடு 41, வாட்சன் 42 ரன் எடுத்து வெளியேறினர். அடுத்து இறங்கிய தோனி 21 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். 168 ரன்கள் இலக்குடன் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே வார்னர் 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய மனிஷ் பாண்டே வந்த வேகத்தில் 4 ரன் எடுத்து நடை கட்டினார். பின்னர், இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 57 ரன்கள் குவித்தார். பின்னர், இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்து 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

Published by
murugan

Recent Posts

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

IND Vs ENG: ”தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்க விரும்புகிறேன்” – சுப்மன் கில்.!

இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…

6 hours ago

மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.!

சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…

6 hours ago

ஆபரேஷன் சிந்து: ஈரானை தொடர்ந்து இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு.!

இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…

7 hours ago

வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்.., ”இது வெறும் கீறல்தான்”- எலான் மஸ்க் பதிவு.!

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…

8 hours ago

ஜூன் 24, 25ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…

8 hours ago

அணு உலை தகர்ப்புக்கு பதிலடி.., இஸ்ரேலின் முக்கிய இடங்களை தாக்கிய ஈரான்.!

மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…

8 hours ago