கவுண்டி சாம்பியன்ஷிப் ; 6 விக்கெட்களை வீழ்த்தி அஸ்வின் அசத்தல்.! வீடியோ உள்ளே..!!!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.மேலும்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் ,இப்போட்டிகளுக்கு தயாராகுவதற்காக முன்னால்,இங்கிலாந்தின் தி ஓவலில் நடைபெற்ற உள்ளூர் டெஸ்ட் தொடரான,கவுண்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விளையாடினார்.
முதல் இன்னிங்ஸில் சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் 99 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் மட்டுமே அஸ்வின் வீழ்த்தினார்.எனினும், பேட்டிங்கில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.முதல் இன்னிங்ஸில் சாமர்செட் அணி 429 ரன்கள் எடுத்த நிலையில்,அஸ்வின் விளையாடிய சர்ரே அணி 240 ரன்களில் மொத்த விக்கெட்களையும் இழந்தது.
அதன்பின்னர்,இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின், 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால், தடுமாறிய சாமர்செட் அணி,மொத்தமாக 69 ரன்களில் சுருண்டது.
இதனால்,கடந்த 11 ஆண்டுகளில் ஜீதன் படேலுக்குப் பிறகு கவுண்டி ஆட்டத்தில் முதல் சிறப்பான பந்து வீச்சாளராக அஸ்வின் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்,அடுத்த மாதம் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ள நிலையில்,அஸ்வினின் இத்தகைய பந்துவீச்சு இந்திய ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையாக அமைந்துள்ளது.
Watch all six wickets for @ashwinravi99 at The Kia Oval this morning, as Somerset were bowled out for just 69.
???? @DelhiCapitals @BCCI pic.twitter.com/4ybYW4dAno
— Surrey Cricket (@surreycricket) July 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025