Rishabh Pant [file image]
ரிஷப் பண்ட்: இந்திய அணியில் சில விரிசல் இருப்பதாக ஊடகங்கள், சமூக தளங்கள் பேசி வந்ததால் ரிஷப் பண்ட் இந்திய அணியில் நடக்கும் உண்மையை விளக்கி கூறி இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் பேட்டிங்கின் போது, தற்போது 3-வது விக்கெட்டுக்கு அதிரடி வீரரான ரிஷப் பண்ட் களமிறங்கி வருகிறார். இது அயர்லாந்துடனான போட்டியில் சர்ச்சையான கேள்வியாக மாறியபோது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் விளக்கி கூறி இருந்தார்.
மேலும், ஐபிஎல் தொடரில் இருவரும் வேறு வேறு அணிக்கு கேப்டனாக செயல்பட்டு நன்றாகவே வழிநடத்தி கொண்டு சென்றார்கள். அதிலும் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவரும் சிறப்பாக விளையாடி அணியையும் நன்கு வழிநடத்தி சென்றார், துரதிஷ்டாவசமாக குவாலிபயர் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.
ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பெற்றவர் தான் ரிஷப் பண்ட் ஆவார். அதே போல மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பெற்றவர் தான் சஞ்சு சாம்சன். தற்போது, சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இவரை அணியில் எடுத்து வருவதால் இவருக்கும் சஞ்சு சாம்சனுக்கு ஏதோ ஒரு விரிசல் உள்ளது என சமூகத்தளத்தில் ரசிகர்கள் பேச தொடங்கினார்கள்.
இந்த சர்ச்சைக்கு அவரது யூட்யூப் சேனலில் பேசி தெளிவுபடுத்தி முற்று புள்ளி வைத்துள்ளார். இதை குறித்து பேசிய அவர், “எனக்கும் சஞ்சுவுக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. சஞ்சு எப்போதுமே ஒரு அமைதியான மனநிலையில் இருப்பார். மேலும், சமூக ஊடகங்களில் எங்களைப் பற்றி என்ன விஷயங்கள் பேசுகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்.
ஆனால், தனிப்பட்ட முறையில் நாங்கள் இருவரும் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் ஒரே அணியில் இடம் பெற்றுள்ள சக வீரர்கள் அவ்வளவு தான். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல மரியாதை உள்ளது”, என அவர் கூறி இருந்தார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…