போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

கிழக்கு காசி ஹில்ஸ், மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மற்றும் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் ஆகிய குறிப்பிட்ட எல்லை மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

meghalaya night curfew

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்து வரும் போர் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு கவலைகளைக் காரணம் காட்டி, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163 இன் கீழ், இந்த கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என தெரிவித்துள்ளது.

மேகாலயாவில் உள்ள கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட நீதிபதி ஆர்.எம். குர்பா பிறப்பித்த உத்தரவின்படி, சட்டவிரோத எல்லைக் கடப்புகள் மற்றும் கால்நடைகள், கடத்தல் பொருட்கள், வெற்றிலை, உலர் மீன், பீடி மற்றும் தேயிலை இலைகள் உள்ளிட்ட பொருட்களை கடத்துவதைத் தடுப்பதே இந்த ஊரடங்கு உத்தரவின் நோக்கமாகும்.

கிழக்கு காசி ஹில்ஸ், மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மற்றும் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் ஆகிய குறிப்பிட்ட எல்லை மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.

சர்வதேச எல்லையை சட்டவிரோதமாக கடக்க விரும்பும் தனிநபர்களின் நடமாட்டத்தையும், சட்டவிரோதமாக ஒன்றுகூடுவதையோ அல்லது சாத்தியமான ஆயுதங்களை எடுத்துச் செல்வதையோ இந்த உத்தரவு கட்டுப்படுத்துகிறது. அதன்படி, பூஜ்ஜியக் கோட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் தினமும் இரவு 8:00 மணி முதல் காலை 6:00 மணி வரை அமல்படுத்தப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்