மைதானத்தில் வளர்ந்த புல்.. அஷ்வினுக்கு இடம் கிடைக்குமா.? டெஸ்ட் சேம்பியன்ஷிப் அணி குறித்து தினேஷ் கார்த்திக் கணிப்பு.!

R Ashwin

ஓவல் மைதானத்தில் புல் வளர்ந்து இருப்பதால் சுழற்பந்துவீச்சு எடுபடாது என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 

இன்று பிற்பகல் லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இரன்டு இடங்களை பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன.

இதற்கான தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டி குறித்து தனது கணிப்பை இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், ஓவல் மைதானத்தில் 6 மிமீ அளவுக்கு புற்கள் வளர்ந்து உள்ளது. அதனால் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைபப்து கடினம். புற்கள் அளவு அதிகமாக இருப்பதால் சுழற்பந்து எடுபடாது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சமி, சிராஜ், ஷரதுல் தாகூர் , உமேஷ் யாதவ் என 4 வீரர்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், விராட் கோலி, சுப்மன் கில், புஜாரா, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், உனத்கட், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெஸ்டில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணி வீர்கள் பட்டியல் டாஸ் சமயத்தில் வெளியிடப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்